பிஸ்தா பருப்பு என்பது நாம் எப்போதாவது எடுத்துக்கொள்ளும் உணவாக இருக்கிறது. இந்நிலையில் இதில் இருக்கும் நன்மைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு சத்து, இதயத்தின் ஆரோக்கியதற்கு நல்லது. பக்கவாதம் வராமல் தடுக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

30 பிஸ்தாக்களை சாப்பிட்டால்கூட 100 கலோரிகள்தான் என்பதால் இதை நாம் சிறிது அதிகமாகவே சாப்பிடலாம். இதில் புரோட்டின் இருக்கிறது. ஒரு முட்டை சாப்பிடுவதற்கு சமமான புரோட்டின் இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் புரோட்டீன், நார்சத்து, கொழுப்பு சத்து இருப்பதால் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.
பிஸ்தவின் நிறத்திற்கு காரணமான விஷயங்கள், நம்மை நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மனித செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. மேலும் புற்று நோய் ஏற்படும் சாத்தியங்களை குறைக்கிறது.
மேலும் கண் தொடர்பான சதை வளருதல், பார்வை குறைப்பாடு போன்றவைகள் ஏற்படாமல் தடுக்கிறது. ஆனால் இதை அதிகமாக சாப்பிடாமல் பார்த்துக்கொள்வதும் அவசியமாகிறது.