புசு புசுன்னு புல்கா எப்படி செய்வது என்று பார்ப்போம். நம்மில் நிறைய பேர் சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவோம். ஆனால் சப்பாத்தியில் இருந்து இந்த புல்கா சற்று புஸ்ஸுன்னு வீங்கி இருக்கும். இதனை எண்ணெய் இல்லாமலும் செய்யலாம். இதனை எப்படி செய்வது என்று டீக்கடைக்கு கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு சர்க்கரை உப்பு எண்ணெய்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, சிறிதளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி பதத்திற்கு இதனை மிருதுவாக பிசைய வேண்டும்.
மேலே சிறிது எண்ணெய் தேய்த்து அப்படியே ஊற வைக்கவும். ஒரு பத்து முதல் 15 நிமிடம் கழித்து அதனை பிசைந்து எடுத்து சப்பாத்தி மாவு திரட்டுவது போல திரட்டி கொள்ளவும். வர கோதுமை மாவு போட்டு திரட்டவும்.
இதனை ஒரு தோசை கல்லில் போட்டு மாற்றி மாற்றி திருப்பி போடவும். பின்னர் அடுப்பின் மேல் இதனை வைத்து எடுக்கலாம். தோசை கல்லில் அரைவேக்காட்டோடு எடுத்து அடுப்பின் மேல் இதை வைத்து எடுக்கும் போது அது புஸ்ஸுன்னு வீங்கி வரும்.