மண்பானை வைத்து இந்த பிளம் கேக்கை செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் கோதுமை மாவு , காப்பி பொடியே இந்த கேக் செய்ய போதுமானதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 2 கப்
முட்டை – 2
டூட்டி ஃப்ரூட்டி
உப்பு
எண்ணெய் – 1 கப்
வெண்ணிலா எசன்ஸ்
காப்பி பொடி
வெல்லம் கரைத்தது
செய்முறை:
ஒரு மண் பாத்திரத்தை வைத்து, அதில் 2 கிளாஸ் மண்ணை நிரப்ப வெண்டும், தொடர்ந்து ஒரு பாத்திரத்தில், 2 முட்டையை டைத்து ஊற்ற வேண்டும். தொடர்ந்து வெல்லத்தை கரைத்து சேர்க்க வேண்டும். காப்பி தூளை சேர்க்க வேண்டும். அதற்கு மேல் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதை நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கிளர வேண்டும். தொடர்ந்து இதில் அரை கப் எண்ணெய், வெண்ணில எசன்ஸ் சேர்க்க வேண்டும். ஒரு சிட்டிகை உப்பை மட்டும் சேர்க்க வேண்டும். ஒரு வட்டமான அலுமினியம் பாத்திரம் முழுவதும் வெண்ணை தடவ வேண்டும். மேலாக கோதுமை மாவை தூவிட்டு, அதன் மீது மாவு கலவையை கொட்ட வேண்டும்.
தொடர்ந்து டூட்டி ஃப்ரூட்டியை மேலாக தூவ வேண்டும். தற்போது மண்பாத்திரத்தில் உள்ள மண் சூடானதும், அதில் சிறிய இரும்பு ஸ்டாண்டை வைக்கவும் , அதற்கு மேலாக அலுமினியம் பாத்திரத்தை வைக்க வேண்டும். தொடர்ந்து இந்த பாத்திரத்தை சிறிய மூடி போட்டு மூடவும். மண்பானையை பெரிய மூடி போட்டு மூடவும். சுமார் 45 நிமிடங்களில் சூடான பிளம் கேக் ரெடி. ஒரு பெரிய தட்டில் அலுமினியம் பாத்திரத்தை தலைகீழாக வைத்து தட்ட வேண்டும்.