பிளம்ஸ் பழங்களில் பல்வேறு நன்மைகள் உள்ளது. இதில் ஆண்டி ஆஸிடண்ட், நார்சத்து, பொட்டாஷியம், வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை உள்ளது. இவை ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இதய ஆரோக்கியம் மற்றும் சரும நலனுக்கு கூட நன்மை தரும்.
பிளம்ஸ் பழங்களில் கொலஸ்டரால் சுத்தமாகவே இல்லை. ஒரு முறை சாப்பிடும்போது 1.5 கிராம் நார்சத்து உடலுக்கு கிடைக்கும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். மேலும் சருமத்தின் நலனை பாதுகாக்கும். இதில் இருக்கும் பொட்டாஷியம் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவும். இதுபோல எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இது உதவும்.
இந்நிலையில் பாதி அளவில் இருக்கும் பிளம்ஸ் அல்லது 66 கிராம் பிளம்ஸ் இருக்கும் சத்துக்கள் பற்றி தெரிந்துகொள்வோம். கலோரி: 30, கார்போஹைட்ரேட்- 8 கிராம், சுகர் – 7 கிராம், புரத சத்து; 0 , நார்சத்து : 1 கிராம், வைட்டமின் சி, கே, பொட்டாஷியம்.
இதில் இருக்கும் நார்சத்து, வயிற்றின் செயல்பாடுகளை சீராக்கி, மலச்சிக்கலை தடுக்கும். இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்டான பினோபிலிக் ஆசிட், நமது செல்கள் சேதமடையாமல் பார்த்துக்கொள்ளும். இதனால் வீக்கம் குறையும்.
இதில் இருக்கும் பொட்டாஷியம், ஆரோக்கியமான ரத்த அழுத்த அளவை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் கொலஸ்ட்ராலை, இதய ரத்த கூழாய்களில் சேராமல் தடுக்கும். இதனால் இதய நோய் ஏற்படாது.
இந்நிலையில் இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் இருப்பதால், ரத்த சர்க்கரையை அதிகப்பட்டுத்தாது. இதில் இருக்கும் வைட்டமின் கே, எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். இந்த வைட்டமின் கே சத்து நமது எலும்புகள் காசியத்தை உள்வாங்கிக்கொள்ள உதவும்.
சர்க்கரை நோயாளிகள் குறிப்பாக 100 கிராம் வரை எடுத்துகொள்ளலாம். காலை 10 மணி ஒரு முறையும், மாலை 6 மணிக்கு ஒரு முறையும் எடுத்துகொள்ளலாம். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”