குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டுமே இந்த குழம்பு செய்யப்படுகிறது. நீங்களும் வீட்டில் இதை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
மொச்சை 50 கிராம்
பச்சரிசி- 3 ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
புளி எலுமிச்சை அளவு
அவரைக்காய் 10
கத்திரிக்காய் 3
முருங்கைக்காய் 1
தக்காளி 2
மஞ்சள் பொடி தேவையான அளவு
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
மல்லிப் பொடி 2 ஸ்பூன்
கருவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லி இலை
பெருங்காயம்
எண்ணெய்
உப்பு
பெங்காயம் – 1 ஸ்பூன்
செய்முறை : மொச்சையை நாம் நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை தண்ணீ சேர்த்து வேக வைக்கவும். தொடர்ந்து பச்சரி மற்றும் துவரம் பருப்பை 1 மணி நேரம் ஊற வக்கவும். நன்றாக காய்ந்ததும் மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். தொடர்ந்து சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து இடித்துகொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில், 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்க்கவும். பெருங்காயம் சேர்க்கவும். தொடர்ந்து கருவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்க்கவும். தொடர்ந்து இதில் கொத்தைவரங்காய், தக்காளி, முருங்கைக்காய், அவரைக்காய், கத்திரிக்காய் சேர்த்து நன்றாக கிளரவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து மொச்சையை சேர்த்து கிளரவும். எல்லா காய்களும் வேக வைக்கவும். தொடர்ந்து இதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். தொடர்ந்து புளி தண்ணீர் சேர்க்கவும். உப்பு சேர்த்து கிளரவும். மிக்ஸியில் அரைத்த அரிசு கலவையில், சின்ன வெங்காயம் இடித்த கலவையை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றவும். தொடர்ந்து இதை குழம்பில் சேர்க்கவும். கடைசியாக தாளிப்பு வடகத்தை எண்ணெய்யில் தாளித்து சேர்த்துகொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“