அவல் வைத்து தோசை செய்யலாம். காலையில் வேகமாக உணவு செய்ய இதை ட்ரை செய்து பாருங்க. வேலைக்கு செல்பவர்கள், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது விரைவாக செய்ய ஒரு சிம்பிள் ரெசிபி.
தேவையான பொருட்கள்
அரிசி – 100 கிராம்
அவல் – 200 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் – 1
கடுகு – 1 டீஸ்பூன்
இஞ்சி துருவல் = சிறிதளவு
செய்முறை
அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித் தனியே ஊற வைத்து ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி ஆகியவைகளைப் போட்டுத் தாளித்து மாவில் உப்பு சேர்த்து கொட்டி கலக்கவும்.
இப்போது தோசைக் கல்லில் மாவை தேவையான அளவு சேர்த்து, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டு எடுக்கவும். அவ்வளவு தான் அவல் தோசை ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil