இயற்கை உணவுகளில் உள்ள நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் அறிவியல் மொழியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் டாக்டர் கு. சிவராமன். இவர் மாதுளை பழத்தில் உள்ள சத்துகள் நன்மைகள் குறித்து ஒரு யூடியூப் வீடியொவில் பேசியுள்ளார். மேலும், சீன மருத்துவத்தில் ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு அற்புத தீர்வாக மாதுளை பழம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மாதுளை முதலில் அதிகபட்ச இரும்பு சத்து தரக்கூடிய ஒரு கனிரகம். இரும்பு சத்து குறைபாடு நிறைய பெண்களுக்கு உள்ளது. இதனால், 40 சதவீதமான பெண் குழந்தைகள் ரத்த சோகையில இருக்கிறார்கள். பெண்களுக்கு மாதவிடாயின் போது நிறைய ரத்த இழப்பு ஒவ்வொரு மாதமும் நடக்கிறது. அவர்கள், உணவில் இரும்புச்சத்து எடுக்க தவறி விட்டார்கள், என்றால், பல பெண்களுக்கு வேறு எந்த அறிகுறிகளும் தெரியாமலே அவர்களுக்கு ரத்த சோகை நோய் இருக்கும். பிறகு, வேறு ஏதாவது நோய் வந்து சிகிச்சை பெறும்போது, அவர்களுக்கு ரத்த சோகை இருப்பது தெரியவரு. ரத்த சோகை இருந்தால், நோயின் தீவிரம் அதிகரிக்கும், முழுமையாக குணமடையாது. இந்த ரத்த சோகையை போக்குவது மாதுளை பழம் என்று டாக்டர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மாதுளை பழத்தை ஸ்நாக்ஸாக முத்துக்களை உதித்து கொடுத்து அனுப்பலாம். மாதுளையை சாறாக குடிப்பதைவிட முத்துக்களாக சாப்பிடுவது நல்லது. மாதுளையை முத்துக்களாக சாப்பிடும்போது இரும்புச் சத்துமட்டுமில்லாமல் நார்ச்சத்தும் கிடைக்கிறது என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
அதே போல, மாதுளை பழத்துக்கு புற்றுநோயை எதிர்க்கக்கூடிய ஆற்றல் இருப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள். இந்த நிறமி சத்துக்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு கனிக்கும் பிரத்யோகமாக உள்ள நிறங்களுக்கு மருத்துவ குணம் இருக்கிறது. மாதுளையின் சிவப்பு நிறம் காரணமாக புற்றுநோயை தடுக்கிறது என்று சொல்லி இன்றைய அறிவியல் விஞ்ஞானம் கண்டறிந்து இருக்கிறது, அதனால், அனைவரும் அன்றாடம் அல்லது வாரத்திற்கு 2 - 3 நாள் மாதுளை பழம் சாப்பிடுவது நல்லது என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
அதே போல, சீன மருத்துவத்தில் மாதுளை பழம் ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு அற்புதத் தீர்வு என்று உறுதி செய்துள்ளதாக டாக்டர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
மாதுளை பழக்ம் அண்களின் விந்தணுக்களினுடைய எண்ணிக்கையை உயர்த்தி அந்த அணுக்கள் நல்ல சீராக இயங்குவதற்கும் பயன் தருவதற்கு மாதுளை பழம் பயன்படுகிறது என்கிற அறிவியல் உண்மையை சீன மருத்துவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதே நேரத்தில், மாதுளை பழம் ஆண்மை பெருக்கியாகவும் இருக்கும் ஆண்களுடைய விந்தணுக்களை உயர்த்தி குழந்தை பேரின்மைக்கு தீர்வு காண்கிறது. ஒரு வேலை ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவு இருந்தது என்றால் மாதுளை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இயல்பாகவே விந்தணுக்கள் எண்ணிக்கை உயரும்” என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“