மாதுளை பழத்தில் அதிக நன்மைகள் இருக்கிறது என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான், ஆனால் அதன் தோலில் அதே அளவிற்கு நன்மை இருக்கிறது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
பற்களின் ஆரோக்கியத்தை இது பாதுகாக்க உதவுகிறது. மாதுளை தோலை உறித்து அதை காய வைத்து பல் துலக்கும்போது, பல் ஆரோக்கியமாகிறது. எலும்பை வலுப்பெற செய்யவும் உதவுகிறது. மாதவிடாய் நின்ற பின் பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபுரோசிஸ் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
பருக்கள் வராமல் இருக்கவும், சருமம் பொலிவுடன் இருக்கவும் உதவுகிறது. மேலும் பேக்டீரியா தொல்லையிலிருந்து விடுபட இது உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராகவும் இது செயல்படுகிறது. மேலும் ஆபத்தான இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இந்நிலையில் பல்வேறு நன்மைகள் இதில் இருக்கிறது.
இருமல் நீங்கவும், தொண்டையில் ஏற்படும் புண்களை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது. இந்நிலையில் மாதுளை தோலில் மேலும் அதிக நன்மைகள் இருப்பதால் தொடர்ந்து நாம் பயன்படுத்துவது நல்லது.