மாதுளை பழம் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-ட்டியூமர் பண்புகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ மற்றும் ஃபோலிக் அமிலத்தின் நல்ல மூலமாக இது உள்ளது. இப்படியாக அதிக சத்துக்கள் நிறைந்த மாதுளைபழம் கர்பிணி மற்றும் திருமணமானவர்களுக்கு எப்படி எல்லாம் பயன்படுகிறது என்று மருத்துவர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனியாக உள்ள மாதுளையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அவற்றில் முக்கியமானவற்றை இப்போது பார்க்கலாம்.
மாதுளையை தினமும் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும், செரிமானத்தை சீராக்குகிறது மற்றும் சருமத்தையும் பளபளப்பாக மாற்றுகிறது.
அதுமட்டுமின்றி தோல் புற்றுநோய் வராமல் தடுக்கவும் புற்று செல்கள் உருவாகாமல் இருக்கவும் உதவுகிறது. மேலும் மூளை சுறுசுறுப்பாக வைக்கிறது. மேலும் ஞாபக மறதி, அல்சைமர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
தினமும் பழம் அல்லது ஜூஸாக குடித்து வர தோல் பளபளப்பாகும். இதில் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்.
மாதுளை பழம் இத்தனை நோய்களை தடுக்குமா?Pomogranate benefits in tamil/ Dr.Mythili
தொடர்ந்து பெண்கள் சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனை நீங்கும். ரத்த சோகையை நீக்கி ரத்தத்தை சுத்தமாக்கும். மாதுளை பழ கொட்டைகளை மென்று சாப்பிட்டுவர பற்களில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து ஈறுகளை பலமாக்கும் என்கிறார்.
அதேபோல கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் குமட்டல் இருக்கும் அதையும் சரிசெய்யும். திருமணமான ஆண்கள் பெண்கள் தினமும் சாப்பிட வேண்டிய முக்கியமான பழம் மாதுளை ஆகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.