பொங்கல் என்றாலே இந்த சாம்பார் இல்லாமல் இருக்காது. அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, தேங்காய் சேர்த்து நாம் சாம்பார் வைப்போம். இது மிஞ்சினாலும், அதை சுட வைத்து அடுத்த நாள் சாப்பிடுவோம். இதன் ரெசிபியை நாம் தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருக்கள்
முருங்கைக்காய், வாழைக்காய், மாங்காய், பீன்ஸ், அவரக்காய், சேனைக்கிழங்கு, உருளைகிழங்கு, தக்காளி, ( என்ன காய்கறிகள் கைவசம் இருக்கிறதோ எல்லாவற்றையும் சேர்க்கலாம்)
துவரம் பருப்பு
உளுந்தம் பருப்பு
கருவேப்பில்லை
எண்ணெய்
கடுகு
வரமிளகாய்
உப்பு
கொத்தமல்லி
சாம்பார் பொடி
செய்முறை
முதலில் குக்கரில் தண்ணீர் விட்டு, கழுவி துவரம் பருப்பை அதில் போட்டு 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தப்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். தொடர்ந்து வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். தொடர்ந்து நறுக்கிய காய்கறி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

காய்கறி வெந்ததும், அதில் தேங்காய் அரைத்ததை ஊற்றி கலக்கவும். தொடர்ந்து புளி தண்ணீர் ஊற்றவும் . சில நிமிடங்கள் கழித்து வேக வைத்த பருப்பை சேர்க்கவும். சுமார் 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.