பண்டிகை நாட்களில் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை மறந்துவிடுவோம். இந்நிலையில் இந்த பொங்கலை நாம் ஹெல்தியாக கொண்டாடலாம். இந்த சாமை பொங்கலை வீட்டில் தவறாமல் செய்து பாருங்க
தேவையான பொருட்கள்
நெய்
இஞ்சி
சீரகம்
பெருங்காயத்தூள்
பாசிப் பருப்பு
சாமை
முந்திரி
உப்பு
செய்முறை :
முதலில் பாசிப் பருப்பு மற்றும் சாமையை நன்றாக கழுவ வேண்டும் ஒரு கப் அரிசிக்கும் 4 கப் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்து கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைக்கவும். 6 விசில் விட்டதும், ஒரு பாத்திரத்தில் நெய் எடுத்துக்கொள்ளுங்கள் தொடர்ந்து மிளகு, சீரகம், இஞ்சி வறுத்து இதில் கொட்ட வேண்டும். இந்நிலையில் சுவையான சாமை பொங்கல் ரெடி.