பொன் போன்று மேனி மின்ன வேண்டுமென்றால் பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பொன்னாங்கண்ணி கீரையை வைத்து சுவையான கூட்டு எப்படி செய்வது என்று அருணை கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
பொன்னாங்கண்ணி கீரை பாசிபருப்பு பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் பூண்டு தக்காளி மஞ்சள் தூள் உப்பு சோம்பு எண்ணெய் கடுகு காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல்
செய்முறை
Advertisment
Advertisements
முதலில் பொன்னாங்கண்ணி கீரை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இதனை சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும். இப்போது ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து சிறிது மஞ்சள் தூள், உப்பு போட்டு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பின்னர் சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து வைத்துக் கொள்ளவும். இப்போது பருப்பு நன்றாக வெந்து வந்துவிடும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், இடித்த பூண்டு சீரகம் ஆகியவற்றை சேர்த்து அவை அவற்றை வதங்கவிடவும்.
பின்னர் அதில் நறுக்கி சுத்தம் செய்து வைத்துள்ள பொன்னாங்கண்ணி கீரை சேர்த்து வேகவிட்டு வேகவைத்த பருப்பையும் அதில் சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு கொதிக்க விட்டு எடுக்கவும். தேவைப்பட்டால் தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளலாம் அவ்வளவுதான் சுவையான பொன்னாங்கண்ணி கீரை ரெடி ஆகிவிடும்.