Advertisment

மாதம்பட்டி ரங்கராஜ் கல்யாண விருந்தில் இந்த பூண்டு குழம்பு சாதம் ரொம்பவே பேமஸ் : நீங்கள் ஈசியா செய்யலாம்

வீட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷலாக செய்யும் இந்த பூண்டு குழம்பை ஒரு முறை ட்ரை பண்ணுங்க.

author-image
WebDesk
New Update
sasa

வீட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷலாக செய்யும் இந்த பூண்டு குழம்பை ஒரு முறை ட்ரை பண்ணுங்க. 

தேவையான பொருட்கள்

8 பூண்டு 

1 ஸ்பூன் சீரகம் 

கால் ஸ்பூன் வெந்தயம் 

1 ஸ்பூன் மிளகு 

6 சின்ன வெங்காயம் 

1 கொத்து கருவேப்பிலை 

1 தக்காளி 

4 ஸ்பூன் நல்லெண்ணை 

அரை டீஸ்புன் கடுகு 

அரை டீஸ்பூன் உளுந்து 

கால் ஸ்பூன் வெந்தயம் 

1 கொத்து கருவேப்பிலை 

15 சின்ன வெங்காயம்

8 பூண்டு  

காஷ்மீரி மிளகாய் தூள் 1 ஸ்பூன் 

1 ஸ்பூன் மல்லித்தூள்

மஞ்சள் பொடி 1 சிட்டிகை 

சின்ன நெல்லிக்காய் அளவு புளி

கால் ஸ்பூன் வெல்லம் 

2 கப் வேக வைத்த சாதம் 

செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில், பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம், வெந்தயம், மிளகு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். இதை தக்காளியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். தற்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேத்து கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் மிளகாய் பொடி, உப்பு, மல்லிப்பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். இதில் அரைத்த விழுதை சேர்த்து கிளரவும். புளி கரைசலை சேர்த்து கிளரவும். எண்ணெய் பிரிந்து வந்ததும். வெல்லம் சேர்த்து கிளரவும். தற்போது, இந்த பூண்டு குழம்பில், வேக வைத்த சாதத்தை சேர்த்து, நெய் சேர்த்து கிளரி சாப்பிடவும்.  

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment