சாதம் மீதம் இருக்கா? இந்த தொக்குடன் சேர்த்து ருசிங்க: செஃப் வெங்கடேஷ் பட் ரெசிபி
வீட்டில் மிஞ்சிய சாதத்தை வைத்து சுவையான பூண்டு தொக்கு சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதனை செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

Advertisment
தேவையான பொருட்கள்:
சாதம் (முந்தின நாள் சமைத்தது)
பச்ச வேர்க்கடலை
Advertisment
Advertisements
சமையல் எண்ணெய் (நல்ல எண்ணெய்)
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் கைப்பிடி அளவு பச்ச வேர்க்கடலை போட்டு வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். அதன் பிறகு, தோலுரித்து எடுத்த பூண்டை இடித்து, கடாயில் நல்ல எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். நன்றாக வறுக்கப்பட்ட பூண்டை ஏற்கனவே எடுத்து வைத்துள்ள பொருட்களுடன் மிக்சியில் சேர்த்து லேசான பதத்தில் அரைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து ஒரு டீஸ்பூன் கடுகு, உளுந்து போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை நிறம் மாறாமல் வதக்கி எடுக்க வேண்டும். வெங்காயம் வதங்கும்போதே அதனுடன் கறிவேப்பிலை, சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதனுடன் அரைத்து வைத்திருக்கக் கூடிய பூண்டு பேஸ்டை சேர்க்க நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் மிஞ்சிய சாதத்தை சேர்த்து பொடி மற்றும் சாதம் நன்றாக மிக்ஸ் ஆகும் வரை கிளற வேண்டும். அவ்வளவு தான் பூண்டு தொக்கு சாதம் ரெடி.!