பூரி கிழங்கு மசாலா செய்யும் போதெல்லாம் சுவை நன்றாக இல்லை என்று உணருகிறீர்கள? அப்போ ஒருமுறை அதில் பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்து பாருங்கள். பூரி கிழங்கு சுவை கூட்டிக்கொடுக்கும். பொட்டுக்கடலை மாவு வைத்து ஒரு டேஸ்டியான பூரி கிழங்கு செய்வது பற்றி ஆர்.கே ரெஸிபிஸ் பவுல் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியதாவது,
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
கடலைப்பருப்பு
உளுத்தம்பருப்பு
கடுகு
கருவேப்பிலை
இஞ்சி
பச்சை மிளகாய்
சோம்பு
வெங்காயம்
பொட்டுக்கடலை மாவு
உருளைக்கிழங்கு
உப்பு
மஞ்சள் தூள்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, இடிச்ச இஞ்சி, பச்சை மிளகாய், இடிச்ச சோம்பு, நீளமாக நறுக்கிய வெங்காயம் இவை அனைத்தையும் சேர்த்து உப்பு போட்டு மஞ்சத்தூள் போட்டு வதக்கவும்.
இந்த பொருட்கள் சேர்க்காமல் பூரி மசாலா பண்ணாதீங்க
பின்னர் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் பொட்டுக்கடலை மாவு தண்ணீரில் கலந்து அதில் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கினால் பூரி கிழங்கு மசாலா ரெடி ஆகிவிடும்.
சப்பாத்திக்கும் இந்த பூரி கிழங்கு மசாலா சுவையாக இருக்கும்.