பசியே எடுக்காது... பாட்டி காலத்து ஸ்நாக்ஸ்; செஃப் தீனா ரெசிபி
நமது பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான மரவள்ளிக் கிழங்கு கச்சாயம் எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதற்கான ரெசிபியை சமையற் கலைஞர் தீனா குறிப்பிட்டுள்ளார்.
நமது பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான மரவள்ளிக் கிழங்கு கச்சாயம் எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதற்கான ரெசிபியை சமையற் கலைஞர் தீனா குறிப்பிட்டுள்ளார்.
கோவை, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் உணவுக்கு என தனி பாரம்பரியம் இருக்கிறது. குறிப்பாக, இந்தப் பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு கொண்டு கச்சாயம் என்ற பாரம்பரிய உணவு தயாரிக்கப்படுகிறது. எளிதாக சொன்னால், இதனை நமது பாட்டி காலத்து ஸ்நாக்ஸ் என்று கூறலாம்.
Advertisment
அதன்படி, சுவையான மரவள்ளிக் கிழங்கு கச்சாயம் எப்படி செய்யலாம் என்று செஃப் தீனா தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார். அதனை இந்தப் பதிவில் காணலாம். இந்தக் கச்சாயத்தை சாப்பிட்டால் பசி எடுக்காது என்று கூறுகின்றனர். அந்த அளவிற்கு வயிறை நிறைவாக வைக்கும் சத்துகள் இதில் உள்ளன.
தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு - 1 கிலோ, வெல்லம் - 3/4 கிலோ, ஏலக்காய் - தேவையான அளவு, அரிசி - ஒரு கிளாஸ் எண்ணெய் - தேவையான அளவு
Advertisment
Advertisements
செய்முறை:
கச்சாயம் செய்வதற்கு ஃப்ரெஷ்ஷான மரவள்ளிக் கிழங்கு எடுத்துக் கொள்வது முக்கியம் ஆகும். அந்த வகையில், கிழங்கில் பச்சை கோடுகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், அவை பழைய கிழங்காக இருக்கும்.
மரவள்ளி கிழங்கை முதலில் தோலுரித்து துருவி, பின்னர் அரிசியுடன் கிரைண்டரில் மென்மையாக அரைக்க வேண்டும். அதன் பின்னர், கலவையையுடன் ஏலக்காய் மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கெட்டியாக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மாவு சரியான பதத்திற்கு வந்துவிடும்.
இந்த மாவை எண்ணெய்யில் போட்டு உப்பலாக வரும் வரை பொறித்து எடுத்தால் இனிப்பு கச்சாயம் தயாராகி விடும். இதனை சில நாட்களுக்கு கூட சேமித்து வைத்து பயன்படுத்தலாம். இது சீக்கிரத்தில் கெட்டுப் போகாது.
இது தவிர, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு கலந்து காரமாகவும் கச்சாயம் தயாரிக்கலாம். ஆனால், இதனை அன்றைய தினமே சாப்பிட்டு விட வேண்டும். செயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்ட சிற்றுண்டிகளை சாப்பிடுவதை விட, இது போன்ற பாரம்பரியமிக்க உணவுகளை சாப்பிடும் போது உடல் நலனில் பாதிப்பு ஏற்படாது என்று கூறப்படுகிறது.