சாப்பிட்டதற்கு முன்பு நடப்பது நல்லது என்று கூறுவார்கள். இதைத்தான் மருத்துவர்கள் மற்றும் அரோக்கியத்தை பேணுபவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சாப்பிட்டபின் நடப்பது கூடுதல் நன்மைகள் அளிப்பதாக கூறப்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சாப்பிட்ட பிறகு 60 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் கழித்து நடந்தால் நல்ல பயன் தருவதாக கூறப்படுகிறது.
இதனால் சக்கரை அளவு ரத்ததில் அதிகரிப்பது குறைந்துள்ளது.சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் இது நிரூபனம் ஆகியுள்ளது. இந்த ஆய்வு இந்தியர்களுக்கு கூடுதல் பலனிப்பதாக கூறப்படுகிறது. இதய நோய் இருப்பவர்கள் சாப்பிட்ட பின் நடப்பதை தவிர்ப்பது நல்லது.
இந்நிலையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள், காலையில் நடப்பதால் கிடைக்கும் பலன்களை விட சாப்பிட்ட பின் நடப்பதால் கிடைக்கும் பலன்கள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மற்றவர்களுக்கும் இது உடல் எடை குறைய உதவியாக இருக்கிறது. மேலும் ரத்த சர்க்கரை உடனடியாக அதிகரிக்காமல் இருக்கிறது.
மேலும் அதிரடியான உடல்பயிற்சிகளை செய்யாமல், சிறிய சிறிய நடை மற்றும் அதிக நேரங்கள் உடலை இயக்கிக்கொண்டே இருப்பது போன்ற விஷயங்களை செய்தாலும், ரத்த சர்க்கரை அதிகரிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil