/indian-express-tamil/media/media_files/2025/07/22/potato-fry-2025-07-22-14-45-57.jpg)
வழக்கமான உருளைக்கிழங்கு வறுவலை மாற்றி, மணமணக்கும் கொத்தமல்லி உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் மற்றும் சப்பாத்தியுடன் அருமையாகப் பொருந்தக்கூடிய இந்த ரெசிபியை எப்படிச் செய்வது என்று காயுஸ் கிச்சன் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லித்தழை
பச்சை மிளகாய் - 5-6
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு
தண்ணீர் - 1/4 கப்
தேங்காய் எண்ணெய்
உருளைக்கிழங்கு - 400 கிராம்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டு - 6-7 பல்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மெல்லிய விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதுவே நமது பச்சை மசாலா விழுது. உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி, தேங்காய் எண்ணெயில் உள்ளே மென்மையாகவும் வெளியே மொறுமொறுப்பாகவும் மாறும் வரை பொரித்து எடுக்கவும்.
ஒரு கடாயில், ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கவும். சீரகம் மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்து தாளிக்கவும். இப்போது, அரைத்து வைத்துள்ள பச்சை மசாலா விழுதை சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை 3 நிமிடங்கள் வதக்கவும். நன்கு வதக்கினால் சுவை இன்னும் கூடுதலாகவும் உருளைக்கிழங்கு மிருதுவாகவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி இருக்கும்.
இதனுடன் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலக்கவும். நடுத்தர தீயில் 2 நிமிடங்கள் வறுத்து, அடுப்பை அணைக்கவும். எப்போதும் போல் இல்லாமல் இந்த உருளைக்கிழங்கு பொறியல் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு என்றால் காரம் கொஞ்சம் குறைவாக சேர்த்துக்கொள்ளுங்கள். இதை சாதத்திற்கு மட்டும் இல்லாமல் சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.