பள்ளி முடிந்து வந்ததும் என்ன சாப்பிட இருக்கிறது என்று உங்களது குழந்தைகள் சமையல் அறையில் தேட ஆரம்பிக்கிறார்களா? உங்களுக்கும் என்ன செய்து தருவது என்று தெரியவில்லையா? இனி அந்த கவலை வேண்டாம்.
மழை நேரத்திற்கும் குழந்தைகளின் பசியை போக்க சூடான சுவையான சத்தான போண்டா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானை பொருட்கள்
உருளைக்கிழங்கு
கடலை மாவு
மிளகாய்த்தூள்
கரம் மசாலா
பெங்காய்த்தூள்
உப்பு
எண்ணெய்
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கின் தோலை சீவி பின்னர் உப்பு கலந்த நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் நீரை முற்றிலும் வடித்துவிட்டு அதனை வட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்பு ஒரு பவுலில் கடலை மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
அதில் சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து அதில் நறுக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து ஊற வைக்கவும்.
ஒரு மணி நேரம் ஊறியதும். ஒரு கடாயில் அதை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை ஒவ்வொரு துண்டாக எடுத்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கலாம்
இதனை வேறொரு முறையிலும் செய்யலாம். நறுக்கிய உருளைக்கிழங்கை மாவில் ஊற வைக்காமல் பொறிக்கும் போது மாவில் நனைத்து அப்படியே போட்டு சிவக்க வேகவிட்டு எடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“