உருளைக் கிழங்கில் எப்போதும் கார வகையிலேயே ரெசிபி செய்து சாப்பிட்டிருப்போம். புது விதமாக இனிப்பு செய்வோம், உருளைக் கிழங்கு அல்வா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு – 2
சர்க்கரை – 4 ஸ்பூன்
திராட்சை – 10
பாதாம் – 4
நெய் – 1 ஸ்பூன்
பால் – கால் கப்
முந்திரி – 5
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, பாத்திரத்தில் போட்டு கட்டிகள் இல்லாமல் பிசைந்து கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் மசித்த உருளைக்கிழங்கை போட்டு, இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் சமைக்கவும். அடுத்து அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்கவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
பிறகு மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து நெய் சேர்த்து பாதாம், முந்திரி, திராட்சை போட்டு வறுத்து தனியாக வைக்கவும். உருளைக் கிழங்கு அல்வா வேகும்போது நெய்யில் வறுத்த உலர் பழங்களை மேலே தூவவும். அவ்வளவு தான். ருசியான உருளைக் கிழங்கு அல்வா தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“