உருளைக்கிழங்குகளை நாம் வறுத்து சாப்பிட்டால்தான், அதில் இருக்கும் நன்மைகள் வீணடிக்கப்படுகிறது. இந்நிலையில் சில ஆய்வுகளும் , சில கட்டுரைகளும் உருளை கிழங்கு சாறில் நன்மை இருப்பதாக கூறுகிறார்கள்.
கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் குறையும் என்றும் கரும்புள்ளிகள் செரியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உருளைக்கிழங்கு சாறில் பஞ்சை முக்கி, கண்களுக்கு கீழே மற்றும் முகத்திலும் பயன்படுத்தலாம்.
நம் மூட்டுகளில் வலி வருவதற்கு யூரிக் ஆசிட்தான் காரணம். இதனால் உருளைக் கிழங்கு சாறை குடித்தால், இவை யுரிக் ஆசிட் அளவை குறைத்து, சுறுநீரக ஆரோக்கியத்திற்கு துணை போகிறது. அதிக அளவு யூரிக் ஆசிட் இருந்தால், அதை நீக்குவதற்கு உதவுகிறது.
இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்கு தேவையான 50% வைட்டமின் சி-யை உருளைக்கிழங்கு தருகிறது. மேலும் இதில் இரும்பு சத்தும் அதிகம்.
இந்நிலையில் நமது தலையில் உருளைக்கிழங்கு சாறை பயன்படுத்தினால், பொடுகு சரியாகும். கிட்டதட்ட 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். இது கூந்தலை மிரதுவாக்கும். மேலும் இளநரை ஏற்படுத்த விடாது.
வயிற்றில் உள்ள ஆசிட் சில நேரம், அதிகரிக்கும். இதனால் வாயுத்தொல்லை மற்றும் ஏறிவருதல் ஏற்படலாம். இதை உருளைகிழங்கு சாறு கட்டுப்படுத்த உதவும்.