தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு
கடலை மாவு
பச்சரிசி மாவு
மஞ்சள் பொடி
மிளகாய்த் தூள்
சீரகம்
பெருங்காயத்தூள்
நிலக்கடலை
பொட்டுக்கடலை
பூண்டு
கருவேப்பிலை
உப்பு
செய்முறை
தேவையான உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி அதனை தண்ணீரில் போட்டு வைக்கவும். பின்னர் ஒரு பவுலில் தேவையான அளவு கடலை மாவு, பச்சரிசி மாவு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், உப்பு, சீரகம் இவை அனைத்தையும் நன்றாக கலந்து அதில் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து அதையும் கலந்து விடவும்.
பின்னர் தண்ணீரில் வைத்துள்ள உருளைக்கிழங்கை சிறிய துண்டாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் நன்கு மைய அரைத்து எடுத்து கலந்து வைத்துள்ள மாவில் சேர்த்து பிசையவும்.
கைகளில் ஒட்டாத அளவுக்கு மாவு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதனை முறுக்கு ஒலக்கில் போட்டு காராசேவு மாதிரி பொரித்து எடுத்து வைக்கவும்.
மேலும் இதனுடன் சேர்ப்பதற்கு வேர்க்கடலை, பொட்டுக்கடலை, இடிச்ச பூண்டு, கருவேப்பிலையையும் வறுத்து எடுத்துக்கொண்டு அதில் சிறிது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து பின்னர் காராசேவுடன் கலந்து சாப்பிடலாம்.
உருளைக்கிழங்கு சேர்ப்பதன் மூலம் காராசேவ் நன்கு மொறு மொறு என்று இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“