உருளைக்கிழங்கின் தோலை நீக்கி நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து சரியான பதத்திற்கு வேகவைத்து தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும். நன்கு ஆறவிடவும்.
உருளைக்கிழங்கு ஆறியவுடன் சோள மாவை சலித்து சேர்த்து உருளைக்கிழங்குடன் நன்கு கலந்து விடவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானவுடன் உருளைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாக பொரிக்கவும்.
அடுத்து ஒரு அகல பானில் எண்ணெய், நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து கலந்து விடவும். பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்து விடவும். பிறகு நறுக்கிய பச்சை குடைமிளகாய் சேர்த்து கலந்து விடவும்.
உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். அடுத்து சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து கலந்து விடவும். பின்பு அடுப்பை அணைத்து விட்டு தேன் சேர்த்து கலந்து விடவும்.
பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து மெதுவாக கலந்து விடவும். இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் கீரை, வெள்ளை எள்ளு சேர்த்து கலந்து விட்டால் அவ்வளவு தான் சுவையான ஹனி சில்லி உருளைக்கிழங்கு தயார்.