இட்லி, தோசை, பூரி போன்றவற்றுக்கு எப்போதும் என்ன சைடு டிஷ் செய்வது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? அப்போ வெறும் பொட்டுக்கடலை மட்டும் வைத்து அற்புதமான ஒரு சைட் டிஷான பொட்டுக்கடலை மாவு குழம்பு எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் செய்து காடியிருப்பது பற்றி பார்ப்போம். வெறும் 10 நிமிடங்களில் இதைத் தயார் செய்துவிடலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை மாவு தக்காளி பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் கடுகு உப்பு மஞ்சள்தூள் பட்டை கிராம்பு சோம்பு கசகசா சாம்பார் பொடி கடலை எண்ணெய்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கடாயில் கடலை எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் ½ டீஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்ததும், நீளவாக்கில் மெல்லிதாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் ஈரம் போகும் வரை நன்கு வதக்கினால் போதும் இந்த குழம்புக்கு வெங்காயம், தக்காளி அதிகமாகச் சேர்க்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து பச்சை மிளகாய், மஞ்சள்தூள், பட்டை கிராம்பு சோம்பு கசகசா அரைத்த பொடி, மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவை எடுத்து, தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். அப்படியே சேர்த்தால் கட்டியாகிவிடும் என்பதால், தண்ணீரால் கரைத்து வடிகட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
கரைத்த பொட்டுக்கடலை மாவு கலவையை வதக்கிய வெங்காயம், தக்காளி கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். குழம்பை நன்கு கொதிக்க விடவும். பொட்டுக்கடலை மாவு கலந்தது என்பதால் விரைவில் கெட்டியாகும். அதனால் சீக்கிரம் சேர்த்து குழம்பு நன்கு கொதித்து, கிரேவி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
இந்த குழம்பு இட்லி, தோசை, பூரி போன்றவற்றுக்கு மிகவும் பொருத்தமானது. இந்த குழம்புக்கு நெய் சேர்க்கத் தேவையில்லை. குழம்பில் வெங்காயம், தக்காளி முழுசாக இருப்பதால், சாப்பிடும்போது கடிபட்டு நன்றாக இருக்கும்.