சின்ன வயசுல பக்கத்துல பெட்டி கடையில எல்லாம் கிடைக்கும் ஸ்வீட்தான் இது. பொட்டுக்கடலை கேக் ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த ஸ்பீட் செய்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் 1 மாதம் வரை கூட கெட்டுப்போகாது. உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து அசத்தலான இந்த ஸ்வீட் ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை: முதலில் மிக்ஸிஜாரில் பொட்டுக்கடலையையும் சர்க்கரையையும் ஏலக்காயையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த இந்த மாவை இருமுறை நன்றாக சலித்து எடுத்துக்கொள்ளுங்கள். குருனை நறநறவென கட்டாயமாக இருக்க கூடாது. மாவு நறநறவென இருந்தால் ஸ்வீட் ரெசிபி நறநறப்பாக வந்துவிடும். பொட்டுகடலை எந்த கப்பில் அளக்கிறீர்களோ அதே கப்பில் சர்க்கரையையும் அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
அரைத்த சலித்த இந்தப் பொடியை ஒரு அகலமான பவுலில் போட்டு 1/2 கப் அளவு நெய்யை இதோடு சேர்த்து உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து கொண்டே இருக்க வேண்டும். 7 நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து பிசைந்தால் போதும். மாவு நன்றாக ஒட்டி பிடித்து பால்கோவா, குலோப் ஜாமுன் மாவுபோல நமக்கு கிடைக்கும். அந்த மாவை சிறிது நேரம் ஆறின பின் நீளவாக்கில் கட் செய்து எடுத்து வைக்கவும்.
நாம் அரைத்த மாவில் வெறும் நெய்யை மட்டும்தான் விட்டு பிசைந்து கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் நெய்யை ஊற்றிக் கொள்ளலாம். தண்ணீரோ அல்லது பாலோ இந்த ஸ்வீட்டில் ஊற்றி பிசைந்து விட்டால் ஸ்வீட் சீக்கிரமே கெட்டுப் போய்விடும். அதனால் நெய் மட்டும் விட்டு பிசைந்து கொள்ளுங்கள்.