சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பிரசாந்த் வெள்ளரிக்காய் தோசை பற்றி கூறி உள்ளார். அதன் ரெசிபி இதோ
தேவையான பொருட்கள்
அரை வெள்ளரிக்காய்
ஒரு கப் ரவை
கொத்தமல்லி இலைகள் சிறிய அளவு
2 பச்சை மிளகாய்
2 பூண்டு பற்கள்
1 ஸ்பூன் சீரகம்
தேவையான அளவு உப்பு
2 கப் தோசை மாவு
பெருங்காயத்தூள்
செய்முறை: இட்லி மாவுடன், ரவையை சேர்க்கவும். இதை நன்றாக கிளர வேண்டும். மிக்ஸியில் பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, நறுக்கிய வெள்ளரிக்காய், பெருங்காயத்தூள், சீரகம், சிறிய அளவு உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும். இதை மாவில் சேர்த்துக் கொள்ளவும். இதைத்தொடர்ந்து வழக்கமாக தோசை ஊற்றி இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.