புரோட்டின் நமது உடலுக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நமது தசைகள் வளர்வதற்கு உதவியாக இருக்கிறது. மேலும் நமது தசைகள் தன்னை சரி செய்து கொள்ளவும். மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும் புரோட்டின் சத்து தேவை. குறைந்த புரோட்டீன் எடுத்துக்கொண்டால் சதையின் வலிமை குறையும்.
20 வகையான அமினோ ஆசிட் ஒன்றாக சேர்ந்து புரோட்டினை உருவாக்குகிறது. நாம் புரோட்டினை சாப்பிடும்போது, அமினோ அசிட்-ஆக மாற்றப்படுகிறது. இவை தசைகள் வளர உதவுகிறது.
உதராணமாக ஒருவர் 2,000 கலோரிகளை ஒரு நாளைக்கு சாப்பிட்டால் அவர் 75 முதல் 175 கிராம் வரை புரோட்டினை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறந்த புரோட்டின் கிடைக்கும் உணவுகள்
பீஃப், பன்றி கறி, கோழிக்கறி, முட்டை, மீன், கடல் உணவுகள்,பால் உணவுகள்,
சைவம் உண்ணுபவர்களுக்கு : பீன்ஸ், பட்டாணி, நட்ஸ், சோயா
புரோட்டின் சாப்பிட வேண்டும் என்பதால், அதிகமாக சாப்பிடக் கூடாது அது உடல் உபாதைகளை மட்டுமே ஏற்படுத்தும். பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம்.