மதிய உணவுக்கு ஏற்ற வகையில் ஒன் பாட் ரெசிபி எவ்வாறு ஈசியாக செய்யலாம் என்று இந்த சமையல் பதிவில் பார்க்கலாம். இது சுவையாக இருப்பது மட்டுமின்றி புரத சத்து நிறைந்திருப்பதால், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
நெய்,
கரம் மசாலா பொருட்கள்,
பூண்டு,
பெரிய வெங்காயம்,
பச்சை மிளகாய்,
புதினா இலைகள்,
உப்பு,
கொண்டை கடலை,
பாஸ்மதி அரிசி மற்றும்
தேங்காய் பால்.
செய்முறை:
அடுப்பை ஆன் செய்து அதில் பிரஷர் குக்கர் வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய், கரம் மசாலா பொருட்கள், பொடியாக நறுக்கிய பூண்டு, பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
அதன் பின்னர், இரண்டு பச்சை மிளகாய், கொஞ்சமாக புதினா இலைகள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். இதையடுத்து, ஊறவைத்த கொண்டை கடலை சேர்த்து வதக்கலாம். இதற்கடுத்து, கழுவிய பாஸ்மதி அரிசியை இத்துடன் சேர்க்க வேண்டும்.
இறுதியாக, இரண்டு கிளாஸ் தேங்காய் பால் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்தால், சுவையான ஒன் பாட் லஞ்ச் ரெசிபி தயாராகி விடும். இதில் நிறைய புரத சத்து இருப்பதால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.