scorecardresearch

50 வயதுக்கு மேல் எலும்பு வீக் ஆகுதா? இந்தப் பழத்தில் தினமும் 5 அல்லது 6 சாப்பிடுங்க!

ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய் 40 வயதை கடந்த எல்லோரும் எதிர்கொள்ளும் சிக்கலாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் உலர் பிளம்ஸ் பழங்களை சாப்பிட்டால் ஆஸ்டியோபோரோசிஸ் வராது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

50 வயதுக்கு மேல் எலும்பு வீக் ஆகுதா? இந்தப் பழத்தில் தினமும் 5 அல்லது 6 சாப்பிடுங்க!

ஆஸ்டியோபோரோசிஸ்  என்ற நோய் 40 வயதை கடந்த எல்லோரும் எதிர்கொள்ளும் சிக்கலாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் உலர் பிளம்ஸ் பழங்களை சாப்பிட்டால் ஆஸ்டியோபோரோசிஸ் வராது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் 5 முதல் 6 பழங்களை சாப்பிட்டால் எலும்பு வலுப்பெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் உடலில் உள்ள எலும்பின் வலிமை குறையும்போது, உடலில் வீக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில் உலர் பிளம்ஸ்-யில் வீக்கம் குறைக்கும் கூறுகள் இருக்கிறது.

50 வயதை எட்டிய பெண்கள்  ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மாதவிடாய் நின்றுவிட்ட பிறகு அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய், பக்கவாதம், மார்பக புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகிறது.

இந்நிலையில் குறிப்பாக இடுப்பு எலும்பு முறிவு, ஒருவரது வாழ்வை புரட்டி போட்டுவிடும். இந்த ஆய்வானது மாதவிடாய் நின்றுபோன 50 வயதுகுற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்டது. இந்நிலையில் தினமும் 5 முதல் 6 உலர் பிளம்ஸ் சாப்பிட்டவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தினமும் 5 முதல் 6 பழங்களே போதுமானது என்று ஆய்வு கூறுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Prunes save your bone when you are above fifty

Best of Express