புடலங்காயில் பொரியல், கூட்டு, குழம்பு செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இந்த யம்மி ரெசிபி பலரும் சாப்பிட்டிருக்க மாட்டோம். புடலங்காய் கொண்டு மொறு மொறு ஸ்நாக்ஸ் ரெசிபி, புடலங்காய் ரிங்ஸ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். புடலங்காய் ரிங்ஸ், புடலங்காய் 65 எனப் விதவிதமான பெயர்களும் இதற்கு உண்டு.
தேவையான பொருட்கள்
புடலங்காய் - 1
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை வட்ட வட்டமாக நறுக்கி, அதனுள் இருக்கும் விதைகளை நீக்கி விட வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கி வைத்த புடலங்காயை கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறு மொறு புடலங்காய் ரிங்ஸ் ரெடி. கொத்தமல்லி அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“