ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பல நன்மைகளை கொடுக்கும். குறிப்பாக காய்கறி வகைகள் அதிகம் சாப்பிட வேண்டும். தினமும் காய்கறி சாப்பிட வேண்டும். எப்போதும் ஒரே மாதிரியாக காய் செய்து போர் அடிக்கிறது என்றால் இந்த புடலங்காய் பச்சடி ட்ரை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
புடலங்காய் – பாதி காய்
தயிர் – 1 கப்
சின்ன வெங்காயம் – 5
பச்சை மிளகாய் – 2
தேங்காய் துருவல் – கால் கப்
கடுகு – சிறிதளவு
உளுத்தம்பருப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் புடலங்காய்யை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாகவும், பச்சை மிளகாயை நீள் வாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும். அடுத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இப்போது நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து இதனுடன் நறுக்கிய புடலங்காய், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். இப்போது புடலங்காய் ஆறியதும் அதில் தயிர் சேர்த்து கலக்கவும். பின்னர் கொத்தமல்லித்தழை, தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும். அவ்வளவு தான், சுவையான புடலங்காய் பச்சடி ரெடி.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil