சுவையான புதினா பக்கோடா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம்- 1/2 கப்
கடலை மாவு- 1 கப்
அரிசி மாவு- 2 டீஸ்பூன்
ரவை- 2 கப்
புதினா-2 கப்
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
தனியா தூள்- 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
கொத்தமல்லி இலைகள்- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு, அரிசி மாவு, ரவை, நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவு கலவையை சிறிது சிறிதாக பக்கோடா போல் போட்டு எடுக்கவும். பொன்னிறமாக மாறியதும் எடுத்து பரிமாறவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“