பஞ்சு போல் புசுபுசுன்னு இட்லி வர வேண்டுமா அப்போ எந்த அளவு அரிசி, உளுத்தம்பருப்பு சேர்க்கனும் அப்படின்னு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 4 கப்
உளுந்து - 1 கப்
ஜவ்வரிசி - 1/2 கப்
வெந்தயம் - சிறிது
செய்முறை
இவை அனைத்தையும் நன்கு கழுவி, இட்லி அரிசி ஒரு பாத்திரத்திலும், ஜவ்வரிசி தனி பாத்திரத்திலும், உளுந்துடன் 5 வெந்தயத்தை சேர்த்து ஒரு பாத்திரத்திலும் ஊற வைக்க வேண்டும்.
இவை அனைத்தும் குறைந்தது 5 மணி நேரமாவது ஊற வேண்டும். இப்போது, கிரைண்டரில் முதலில் ஊற வைத்த உளுந்தை சேர்த்து நன்கு மைய அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.
அடுத்து, ஊற வைத்த அரிசி மற்றும் ஜவ்வரிசியை ஒன்றாக சேர்த்து மைய அரைக்கவும். பின்னர் இரண்டையும் ஒன்றாக சேர்த்து உப்பு கலந்து கைவிட்டு கரைத்து இரவு முழுவதும் புளிக்க விட்டு, மறுநாள் காலை இட்லி தட்டில் மாவு ஊற்றி 10 நிமிடத்திற்கு வேக வைத்து எடுத்தால் பஞ்சு போன்ற இட்லி ரெடியாகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“