காலை உணவுக்கு இந்த ஒரு கீரை கடையல் போதும்... ஒரு தட்டு சோறு காலியாகும்

காலை உணவுக்கு சிறப்பான ஒரு கீரை கடையல் சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம். சுடு சாதத்துடன் புளிச்ச கீரை பருப்பு கடையல் ஏற்ற சிறந்த காம்பினேஷன் ஆகும்.

காலை உணவுக்கு சிறப்பான ஒரு கீரை கடையல் சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம். சுடு சாதத்துடன் புளிச்ச கீரை பருப்பு கடையல் ஏற்ற சிறந்த காம்பினேஷன் ஆகும்.

author-image
WebDesk
New Update
பருப்பு கடையல்

காலை உணவுக்கு சாதம் வடித்து அதோடு சுவையான புளிச்ச கீரை பருப்பு கடையல் எப்படி செய்வது என்று பார்ப்போம். சுவையான பருப்பு கீரை கடையல் செய்வது பற்றி ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

புளிச்ச கீரை 
துவரம் பருப்பு  
வெங்காயம் 
தக்காளி  
பச்சை மிளகாய் 
பூண்டு 
மஞ்சள் தூள்    
கல்லுப்பு  
புளி தண்ணீர்  
நெய்  
கடலை பருப்பு  
உளுத்தம் பருப்பு  
கடுகு  
சீரகம்  
தட்டிய பூண்டு  
காய்ந்த மிளகாய்  
பெருங்காயத்தூள் 
சின்ன வெங்காயம்  
கறிவேப்பிலை

செய்முறை 

Advertisment
Advertisements

ஒரு குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்பு, தண்ணீர், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, புளிச்ச கீரை, மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிட்டு 5 விசில் வரும் வரை வேகவிடவும்.  அடுத்து குக்கரை திறந்து கல்லுப்பு, புளி தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

ஒரு கடாயில் நெய் சேர்த்து உருகியதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அடுத்து வேகவைத்த பருப்பு மற்றும் கீரையை  சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். அவ்வளவு தான் கொதிவிட்டு இறக்கினால் சுவையான புளிச்ச கீரை பருப்பு கடையல் தயாராகிவிடும்.

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: