மாதம்பட்டி ரங்கராஜ் கல்யாண விருந்தில் செய்யும், புளிக்குழம்பை வீட்டில் நீங்கள் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் – 4
கொண்டைக்கடலை – 1 கப்
அரை கப் தேங்காய் துருவல்
2 சின்ன வெங்காயம்
¼ ஸ்பூன் சோம்பு
கால் டீஸ்பூன் கடுகு
தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன்
அரை டீஸ்பூன் கடுகு
9 பூண்டு
¼ வெந்தயம்
அரை டீஸ்பூன் சீரகம்
12 வெங்காயம்
5 வத்தல்
2 கொத்து கருவேப்பிலை
2 தக்காளி நறுக்கியதை
உப்பு
கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி
2 ஸ்பூன் குழம்பு மிளகாய் பொடி
1 ஸ்பூன் மிளகாய் பொடி
2 ஸ்பூன் மல்லித்தூள்
கொஞ்சம் தண்ணீர்
சின்ன எலுமிச்சை அளவு புளி
அரை ஸ்பூன் சீரகப் பொடி
2 பச்சை மிளகாய்
செய்முறை : கத்திரிக்காய் பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். ஒரு மிக்ஸியில் தேங்காய், சோம்பு, கடுகு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்துகொள்ளவும். குக்கரில் கொண்டைக்கடலையை பாதி அளவு வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், சேர்க்கவும். கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து கிளரவும். சின்ன வெங்காயம், கருவேப்பிலை, வத்தல், பூண்டு சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் தக்காளி சேர்த்து கிளரவும். கத்திரிக்காய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, குழம்பு மிளகாய் பொடி, உப்பு சேர்த்து கிளரவும். நன்றாக வெந்ததும், புளி தண்ணீர் சேர்க்கவும். கொண்டைக்கடலை சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த தேங்கய் கலவையை சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“