தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் டேஸ்டியான பாயாசம் ரெசிபி எப்படி செய்வது என்று அக்ஷயா டாட் காம் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
நெய் கேரட் பாசிப்பருப்பு நைலான் ஜவ்வரிசி வெல்லம் உப்பு ஏலக்காய் பொடி முந்திரி திராட்சை தேங்காய் பால்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு குக்கரில் நெய் சேர்த்து அது சூடானதும் துருவிய கேரட் செட் வதக்கவும். கேரட் பச்சை வாசம் நீங்கி டிரை ஆக வதங்கி வந்ததும் அதை ஒரு தட்டில் மாற்றி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே குக்கரில் கழுவிய பாசிப்பருப்பையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஊறவைத்து வைத்துள்ள நைலான் ஜவ்வரிசியை சேர்த்து தண்ணீர் விட்டு இரண்டையும் சேர்த்து மூடிவிட்டு விசில் விட்டு இறக்கவும்.
பின்னர் ஒரு பானில் வெல்லம் தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது பாசிப்பருப்பு, ஜவ்வரிசி நன்கு வெந்து வந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள வெல்ல கரைசலை சேர்த்து கலந்து விட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு வறுத்து வைத்துள்ள கேரட்டையும் சேர்த்து கொதிக்க விடவும்.
இதில் சுவைக்காக ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விடவும். இப்போது பாயாசம் கெட்டியாகி வரும் அப்போது நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சைகளை சேர்த்து கலந்து விடவும்.
அடுப்பை அணைத்து ஒரு ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் பால் சேர்த்து கலந்து விட்டால் சுவையான புத்தாண்டு ஸ்பெஷல் பாயாசம் ரெடி ஆகிவிடும்.