விசேஷ நாட்களில் அதிக நேரம் எடுத்து ஸ்வீட் செய்யவில்லை என்று நினைப்பவர்கள் வெறும் 15 நிமிடத்தில் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு ஸ்வீட் பற்றி ஸ்ரீ தமிழ் சேனல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு கசகசா சர்க்கரை தேங்காய் வெல்லம் ஏலக்காய் தூள் நெய் முந்திரி திராட்சை
செய்முறை
Advertisment
Advertisements
அதற்கு ஒரு குக்கரில் சுத்தம் செய்த கடலைப்பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். ஒரு பானில் கசகசா சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு நன்கு வெந்த பருப்பை வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும். வெந்து வந்ததும் அதில் துருவிய தேங்காய், வெல்லம், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்து கெட்டியாகும் பதத்தில் வறுத்து வைத்துள்ள கசகசா சேர்த்துக் கொள்ளவும். பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சைகளையும் சேர்த்து கலந்து எடுக்கவும். அவ்வளவுதான் ஈஸியான கடலைப்பருப்பு ஸ்வீட் வெறும் ஐந்து நிமிடத்தில் ரெடியாகிவிடும்.