இந்த பிஸ்கட் செய்வது ரொம்ப எளிதான விஷயம். கோதுமை அல்லது மைதா மாவு, சர்க்கை போதும். இதை சுலபமாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் மைதா மாவு அல்லது கோதுமை மாவு
½ கப் பொடித்த சர்க்கரை
கால் ஸ்பூன் ஏலக்காய் தூள்
கால் ஸ்பூன் ஆப்ப சோடா
கொஞ்சம் உப்பு
3 ஸ்பூன் நொய்
தேவையான அளவு தண்ணீர்
பொறிக்கும் அளவுக்கு எண்ணெய்
செய்முறை: மைதா அல்லது கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவும். அதில் பொடி செய்த சக்கரை சேர்க்கவும், தொடர்ந்து ஏலகாய் தூள், ஆப்ப சோடா, உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். இதில் நெய் சேர்த்து கலந்துவிடவும். தற்போது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி சுடும் மாவும் போல பிசைய வேண்டும். 30 நிமிடங்கள் இந்த மாவு ஊற வேண்டும். தொடர்ந்து பெரிய உருண்டைகளாக மாற்றி, ஒரு உருண்டையை மாவு சேர்த்து வட்டமாக போட வேண்டும். தொடர்ந்து அதன் ஓரங்களில் உள்ள மாவை நீக்கி, சதுரமாக வெட்டிக்கொண்டு, தொடர்ந்து சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். எண்ணெய்யை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும், இதை எண்ணெய்யில் சேர்த்து பொறித்து எடுக்கவும். சூடான பிஸ்கட் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”