காலையில் இட்லி, தோசை மற்றும் மதியம் சாதத்திற்கு சேர்த்து ஒரு ரெஸிபி செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் வீட்டில் முள்ளங்கி இருந்தால் இந்த சட்னி செய்து பாருங்கள். முள்ளங்கி சட்னி செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியதாவது,
தேவையான பொருட்கள்
எண்ணெய்
முள்ளங்கி
வெங்காயம்
தேங்காய்
கறிவேப்பிலை
புளி
கல் உப்பு
மஞ்சள் தூள்
எண்ணெய்
தனியா
சீரகம்
சிவப்பு மிளகாய்
கடுகு
சீரகம்
சிவப்பு மிளகாய்
பெருங்காயத்தூள்
செய்முறை
முதலில் ஒரு கடாயை எடுத்து எண்ணெய் விட்டு, முள்ளங்கியை சிறு துண்டுகளாக நறுக்கி இரண்டு நிமிடம் அதிக தீயில் வதக்கவும். 2 நிமிடம் கழித்து வெங்காயத்தை நறுக்கி இரண்டு நிமிடம் வதக்கவும். பின்னர் தேங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து சிறிது கறிவேப்பிலை, சிறிது புளி, கல்லுப்பு, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் முழுவதுமாக ஆறவிடவும்.
இப்போது மற்றொரு சிறிய கடாயை வைத்து எண்ணெய், கொத்தமல்லி, சீரகம், மிளகாய் சேர்த்து சிவப்பு மிளகாய் நிறம் மாறும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து முழுவதுமாக ஆற வைக்கவும்.
இப்போது மிக்ஸி ஜாரில் முன் வறுத்த தனியா, சீரகம் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு வறுத்த முள்ளங்கி மற்றும் வெங்காயம் தேங்காய் கலவையை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
முள்ளங்கி சட்னி | Mullangi Chutney Recipe In Tamil | Side Dish For Idly & Dosa | Mullangi Recipes
ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிட்டு
சட்னியில் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான முள்ளங்கி சட்னி ரெடியாகிவிடும்.