வீட்டில் நாம் சமைத்து விட்டு வேண்டாம் என்று தூக்கிப்போடும் ஒரு சில உணவுகளில் கூட புதுசான டிஷ் செய்து சாப்பிடலாம். அப்படித்தான் முள்ளங்கி, பிஞ்சு கத்தரிக்காய் போன்ற காய்கறிகள்.
இவற்றையெல்லாம் வைத்து சுவையாக வெவ்வேறு டிஷ்கள் எப்படி செய்வது என்று பல்லாண்டு வாழ்க யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
டிப்ஸ் 1: முள்ளங்கி இலையை தூக்கி போடாமல் அதை எடுத்து எண்ணெய் விட்டு வதக்கி மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் சேர்த்து துவையல் மாதிரி அரைத்து தாளித்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
டிப்ஸ் 2: பருப்பு அல்லது பயிர் வகைகளை வேக வைத்து வரும் தண்ணீரை வைத்து சாம்பார் செய்யலாம். அல்லது ரசம் மாதிரி தாளித்து குடிக்கலாம்.
டிப்ஸ் 3: பிஞ்சு கத்திரிக்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து அதில் தண்ணீரை வடிகட்டி தேங்காய் பூண்டு, சீரகம், பச்சை மிளகாய் அனைத்தையும் அரைத்து சேர்த்து தாளித்து வேகவைத்து இறக்கினால் கத்தரிக்காய் கொச்சி ரெடியாகிவிடும்.
தினமும் ஐந்து சமையல் குறிப்புகள்
டிப்ஸ் 4: தயிரை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதில் வதக்கிய இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கலந்து அதை பிரட் மேல் தடவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்த தயிரை சப்பாத்தி, தோசை என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.
டிப்ஸ் 5: அசைவம் சமைக்கும் போது அதை வேக வைக்க பப்பாளி துண்டு சேர்த்து வேகவைத்தால் இறைச்சி பதமாக வெந்துவிடும்.