ராகி சேமியா வைத்து புதுவிதமாக சத்தான வடை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ராகி சேமியா – 200 கிராம்
உருளைக் கிழங்கு – 200 கிராம்
கடலைமாவு – 25 கிராம்
தேங்காய் துருவல் அரை கப்
பச்சை மிளகாய் – 6
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை. புதினா – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 200 கிராம்
செய்முறை
சுடு நீரில் 1 கப் சேமியாவுக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு போட்டு வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். தண்ணீரை வடிகட்டவும். அடுத்து உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பிசைந்து வைக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி தழை, புதினா ஆகியவற்றை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, உருளைக்கிழங்குடன் சேர்த்துப் பிசையவும்.
பின்பு மஞ்சள் தூள், தேங்காய் துருவல், கடலை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவு கலவையை எடுத்து வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் உடலுக்கு சத்தான, ருசியான ராகி சேமியா வடை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“