சத்து நிறைந்த உணவுகள் உடல் நலத்திற்கு உகந்தது. ஆரோக்கிய உணவுகள் உடல் நலத்தை மேம்படுத்தும். குறிப்பாக சிறுதானியங்கள் சத்து நிறைந்தவை. தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் கேழ்வரகு ஆப்பம் செய்வது குறித்துப் பார்க்கலாம். கேழ்வரகு உணவுகள் நீரிழிவு நோய்கள் சாப்பிடுவது நல்லது.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு - 2 கப்
சாதம் - 1/2 கப்
சோடா மாவு - 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் கேழ்வரகு மாவை சலித்து எடுக்கவும். பின் அதை கடாயில் கொட்டி அடுப்பில் வைத்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். இப்போது மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து அரைக்கவும். பின்னர் அதனுடன் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
அடுத்ததாக, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சோடா மாவு மற்றும் உப்பு சேர்த்து கரைக்கவும். 8 மணி நேரம் வரை புளிக்க விடவும். மறு நாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும். இப்போது அடுப்பில் ஆப்ப கடாய் வைத்து கடாய் சூடானதும், எண்ணெய் தடவி மாவை ஊற்றி சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார். தேங்காய்பால், முட்டை குருமாவை சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil