ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த ராகி பிஸ்கட் வீட்டிலே செய்யலாம். குழந்தைகள் பள்ளி செல்லும் போது ஸ்நாக்ஸாக கொடுத்து விடலாம். ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
ராகி மாவு -கால் கப்
கோதுமை மாவு - கால் கப்
நாட்டு சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்- 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கோகோ பவுடர்- 2 ஸ்பூன்
பேக்கிங் பவுடன் -1 ஸ்பூன்
நெய்- 100 கிராம்
முந்திரி - 10
காய்ச்சாத பால் - 100 மி.லி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு கால் கப், ராகி மாவு கால் கப், நாட்டு சர்க்கரை, கோகோ பவுடர் 2 ஸ்பூன், பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன், ஏலக்காய் ஒரு டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு டம்ளர் பாலில், 100 கிராம் நெய் சேர்த்து கலந்து இரண்டையும் கலந்து வைத்துள்ள மாவுக்கலவையில் சேர்க்கவும். இதனை நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சிறுது பால் சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை 5 நிமிடங்கள் மூடி போட்டு தனியாக எடுத்து வைக்கவும். அதன்பிறகு மாவுக்கலவையை எடுத்து அதனை உருண்டைகளாக உருட்டி பிஸ்கட் வடிவத்திற்கு வட்டமாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிஸ்கட் அச்சு இருந்தால் அதிலும் வடிவமாக தட்டிக்கொள்ளலாம். அதன் நடுவே முந்திரிகளை உடைத்து அலங்கரித்துக்கொள்ளலாம். பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு மூடி இதனை 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும்.
அதன் பிறகு தயாராக வைத்துள்ள பிஸ்கட்டுகளை ஸ்டாண்ட் மீது வைத்து பாத்திரத்தை மூடி ஒரு 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான ராகி பிஸ்கட் தயார். ஓவனில் பேக் செய்வதாக இருந்தால் 180 டிகிரியில் பேக் செய்து கொள்ளுங்கள். சூடு ஆறியதும் எடுத்து பரிமாறலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“