கேழ்வரகு எனப்படும் ராகி மாவில் சப்பாத்தி சாப்பிட்டு வந்தால் சுகர் அளவு குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படியான ராகி சப்பாத்தி எப்படி சாஃப்டாக தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
உலகெங்கிலும் அதிகப்படியான மக்களை பாதிக்கக் கூடியதாக சர்க்கரை நோய் இருக்கிறது. இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி மொத்தம் 101 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 136 மில்லியன் மக்கள் சர்க்கரை நோய்க்கான அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
Advertisment
நம் வாழ்வியல் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டால் சர்க்கரை நோய்க்கான அபாயத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். தினசரி உடற்பயிற்சி செய்வதுடன், சர்க்கரையை கட்டுப்படுத்துகின்ற உணவு வகைகளை சுழற்சி முறையில் நம் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
அந்த வகையில், கேழ்வரகு எனப்படும் ராகி மாவில் சப்பாத்தி சாப்பிட்டு வந்தால் சுகர் அளவு குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படியான ராகி சப்பாத்தி எப்படி சாஃப்டாக தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம். இந்த சப்பாத்தியை சுகர் இருப்பவர்கள் தவிர, குழந்தைகளும் ருசிக்கலாம்.
ராகி சப்பாத்தி தேவையான பொருட்கள்
Advertisment
Advertisement
ராகி மாவு - 1 டம்ளர் தண்ணீர் - முக்கால் டம்ளர் உப்பு - 1/2 ஸ்பூன் எண்ணெய் - 1 ஸ்பூன்
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பிறகு அதில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இதன்பிறகு, அவற்றுடன் ராகி மாவு சேர்த்து ஒரு முறை கலந்து விட்ட பின்னர் அடுப்பை அணைத்து விடவும். மாவை ஒரு மூடியால் மூடி வைத்து விடவும்.
மாவில் இருக்கும் சூடு ஆறிய பிறகு, அவற்றை சப்பாத்தி தயார் செய்வதற்கு ஏற்றால் போல் மாவை உருட்டிக் கொள்ளவும். மாவை உருண்டையாக பிடித்து சப்பாத்தியாக உருட்டிக் கொள்ளவும்.
இதன்பிறகு, தோசைக் கல்லை சூடேற்றி சப்பாத்தி போல் போட்டு எடுத்துக் கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த ராகி சப்பாத்தி ரெடி. இவற்றை உங்களுக்கு பிடித்த குருமாவுடன் சேர்த்து ருசித்து மகிழலாம்.