ராகி, முந்திரி, பேரீச்சை: அதிக சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்

கால்சியம், நார்ச்சத்து நிறைந்த ராகி ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

கால்சியம், நார்ச்சத்து நிறைந்த ராகி ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ragi

Ragi (Finger Millet)

கேழ்வரகில் அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. புரதம், நார்ச்சத்து அதிகளவு உள்ளது. ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த மில்க் ஷேக் ரெசிபி குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான அளவு

ராகி– 50 கிராம்
பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) – தலா 4
பேரீச்சை – 5
காய்ச்சியப் பால் – 200 மி.கி
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்
நாட்டு சர்க்கரை – சுவைக்கேற்ப

செய்முறை

Advertisment
Advertisements

ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து மிக்ஸில் போட்டு அரைத்து கொள்ளவும். முதல்நாள் இரவில் ஊற வைத்த கேழ்வரகை தண்ணீரை வடிகட்டி அரைத்து கொள்ளவும். இப்போது கேழ்வரகு பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும்.

அதனுடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி எடுக்கவும். அவ்வளவு தான் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த கேழ்வரகு ட்ரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக் தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: