ராகி, கம்பு சேர்த்து ஹெல்தியான இட்லி ரெசிபி வீட்டில் செய்து பாருங்க.
ராகி – 2 கப்
கம்பு – 2 கப்
குதிரைவாலி – 1 கப்
உளுந்து – 1 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ராகி, கம்பு, குதிரைவாலி அரிசி மூன்றையும் 6 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். உளுந்தை தனியாக 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இப்போது இரண்டையும் சேர்த்து அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும். 3 மணி நேரம் புளிக்க விட வேண்டும். அதன் பின் எப்போதும் போல் இட்லி ஊற்றலாம். சாம்பார், சட்னி உடன் ஹெல்தியான இட்லி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“