வெயில் காலம் ஆரம்பித்து விட்டது மதியம் என்ன சாப்பிடுவது என்று தெரியாமல் இருக்கிறதா? சாப்பாடும் சாப்பிட முடியவில்லையா அப்போ மதிய நேரத்தில் ராகி கூழ் கரைத்து குடியுங்கள். வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக இருக்கும். சுவையான ராகி கூழ் எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
ராகி மாவு - 1/4 கப்
கெட்டியான தயிர்
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய் - 2 எண்கள்
கொத்துமல்லி தழை
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
ராகி மாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், தண்ணீரில் உருவாகும் மேல் நுரை அகற்றவும். ராகி மாவுடன் தண்ணீரின் அடிப்பகுதியை நன்றாக கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். ராகி கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி 15 நிமிடங்கள்/அது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். கிளறிகொண்டே இருக்க வேண்டும்.
ராகி கஞ்சி | Ragi Kanji Recipe in Tamil | Summer Recipes | Healthy Energy Drink
கிளறி நன்கு கொதி வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறிய ராகி கலவையில் கெட்டியான தயிர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி
தழை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால் தண்ணீர் ஊற்றி கரைத்தால் அவ்வளவுதான், ஆரோக்கியமான ராகி கூழ் ரெடியாகிவிடும்.