டீ, காபிக்கு பதில் வெறும் வயிற்றில் இந்த கூழ்... கோடை காலத்தை 'கூல்' காலமாக மாத்தும்; இப்படி ட்ரை பண்ணுங்க!
கோடை காலத்திற்கு ஏற்ற கேப்பை கூழ் எவ்வாறு செய்ய வேண்டும் என இந்தப் பதிவில் பார்க்கலாம். இது உடலுக்கு புத்துணர்ச்சியை அளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த வெயில் காலத்தில் நம் உடலை சீராக பராமரிப்பதற்கு கேப்பை கூழ் எப்படி செய்ய வேண்டும் என தற்போது காணலாம். இது நம் உடலுலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. டீ, காபி போன்றவற்றுக்கு மாற்றாக இதனை பருகலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
ராகி மாவு, தண்ணீர், தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சின்ன வெங்காயம், உப்பு
செய்முறை:
Advertisment
Advertisements
பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு ராகி மாவு எடுத்து அத்துடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதையடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் முன்னர் கலந்து வைத்திருந்த கேப்பை மாவை சேர்க்க வேண்டும்.
இதன் பின்னர், மாவின் நிறம் மாறியதும் அடுப்பை ஆஃப் செய்து விடலாம். மாவு சற்று ஆறியதும் அதனை சிறிய உருண்டக்களாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, இந்த மாவு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். இந்தக் கலவை சுமார் 8 மணி நேரம் நன்றாக ஊற வேண்டும்.
இப்போது, மாவு முழுவதையும் அதே தண்ணீரில் கரைத்துக் கொள்ளலாம். இதன் பின்னர், ஒரு கப் தயிர், 2 நறுக்கிய பச்சை மிளகாய்கள், ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி, சின்ன வெங்காயம், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் சுவையான கேப்பை கூழ் தயாராகி விடும். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது புத்துணர்ச்சியாக இருக்கும்.