கோவை விடுமுறை விட்டாச்சு இனி உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் ஸ்நாக்ஸ் எதாவது செய்து தர சொல்லி நச்சரிக்க ஆரம்பிப்பார்கள். அப்படி இருக்கும் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்க வேண்டிய ஒரு ஹெல்தியான ஸ்நாக்ஸ் பற்றி ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
ராகி மாவு - 2 கப் அரிசி மாவு - 1/2 கப் கடலை மாவு - 2 மேசைக்கரண்டி உப்பு - 1 1/2 தேக்கரண்டி பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி எள் - 2 தேக்கரண்டி உப்பில்லாத வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி தண்ணீர் - 1 கப் எண்ணெய்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காய தூள், எள் ஆகியவற்றை எடுத்து நன்கு கலக்கவும். உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
இந்த கலவையில் படிப்படியாக தண்ணீர் சேர்த்து மாவை தயார் செய்யவும். கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மாவை சிறிதளவு எடுத்து முறுக்கு அச்சில் போடவும்.
எண்ணெய் தடவிய தட்டையான கரண்டியில் விரும்பிய வடிவத்தில் முறுக்குகளை உருவாக்கவும். தயாரிக்கப்பட்ட முறுக்குகளை சூடான எண்ணெயில் மிதமான தீயில் எண்ணெய் சத்தம் நிற்கும் வரை வறுக்கவும்.