scorecardresearch

இனி இந்த உணவுதான் வழங்கப்படும்:  நாடாளுமன்றத்தின் புதிய உணவுப் பட்டியல் !

நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவில் இனி முழு தானியத்தில் செய்த உணவுகள் இடம்பெறும் என்று மக்களவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இனி இந்த உணவுதான் வழங்கப்படும்:  நாடாளுமன்றத்தின் புதிய உணவுப் பட்டியல் !

நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவில்  இனி முழு தானியத்தில் செய்த உணவுகள் இடம்பெறும் என்று மக்களவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

முழு தானிய மற்றும் சிறுதானிய வகைகளை அதிகமாக உற்பத்தி செய்யவும், அனைவரும் இதை தேர்வு செய்வது தொடர்பாக மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேசினார்.

இந்நிலையில் பாராளுமன்ற அவைத் தலைவர் ஓம். பிர்லா, பாராளுமன்றத்தில் வழங்கப்படும் உணவில்  முழுதானிய வகையில் செய்த  உணவு இடம் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.  புதிய உணவு பட்டியல் கொடுக்கப்படும் என்று கூறினார். மேலும் ஜி 20 நிகழ்வு இந்தியாவில் நடக்க இருப்பதால், மாநாட்டில் வழங்கப்படும் உணவிலும்  முழுதானியத்தால் செய்யப்பட்ட உணவு இடம் பெரும் .

இந்த உணவுப் பட்டியலில் ராகி தோசை, ராகி தட்டு இட்லி,  சோள காய்கறி உப்புமா இடம் பெறும். மேலும் ராகி பூரி மற்றும் உருளை கிழங்கு சப்சி,,கம்பு கிச்சடி மற்றும் பூண்டு சட்னி ஆகிய உணவு வகைகள் இடம்பெறும்.

இதுபோல இனிப்பு வகைகளில் ராகி வால்நட் லண்டு, கேசர் கீர், கம்பு வகையில் ஒரு ஸ்வீட் வழங்கப்படுகிறது. இந்த உணவுகள் நாடாளுமன்றத்தில் உள்ள எல்லா கேண்டீன்களிலும் கிடைக்கும்.

மேலும் இந்தியாவில் உள்ள குஜராத், ஆந்திர, கேரள உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும் எல்லா வகையான உணவுகளும் கிடைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வழங்கும் உணவை ஐ.டி.டிசி வழங்குகிறது. மொண்டு சைனி, என்பவர்தான்  முதன்மையான சமையலர். மேலும் இவர் ராஷ்டிரபதி பவனில் 5 ½  வருடங்கள் பணிபுரிந்து உள்ளார். 2020ம் ஆண்டு முதல் ஐ.டி.டி.சி நாடாளுமன்ற கேண்டீன் நடத்தி வருகிறது.

சமீபத்தில் குளிர்கால கூட்ட தொடரின்போது, எம்பி-க்களுக்கு வழங்கப்பட்ட உணவில், சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டபோது, அது அனைவராலும் பாராட்டப்பட்டது.

குறிப்பாக ராகி வால்நட் லண்டு மற்றும் கம்பில் செய்த ஸ்வீட் அனைவரையும் கவர்ந்துள்ளதாக செப் மொண்டு சைனி தெரிவித்துள்ளார். இப்படி செயல்படுவது மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முழுதானிய மற்றும் சிறு தானிய வகைகளின் உற்பத்தி குறைந்துள்ளது. 2003 முதல் 2004 வரை 21.32 மில்லியன் எடன் உற்படுத்தி செய்யப்பட்டது. இதுவே 2022 முதல் 2023 வரை 15.92 மில்லியன் டன் உற்பத்தி ஆகி உள்ளது.

சிறுதானிய மற்றும் முழு தானிய உற்பத்தி செய்யும் மாநிலங்களாக ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா, குஜராத், மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, தமிழ்நடு, ஆந்திரா, கர்நாடாக உள்ளன.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Ragi poori to jowar upma parliament gets a new millet menu